| ADDED : டிச 25, 2025 06:22 AM
கிராம வளர்ச்சி விழிப்புணர்வு மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரியில் ஊரகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான கிராமப்புற வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி துறைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. நாட்டுப்புற பாடகர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். பேராசிரியர்கள் ராஜேந்திரன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பாராட்டு மதுரை: மதுரை தொழிலாளர் நலச்சங்க மேல் நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் வளர்ச்சி கழகம் சார்பில் ஆசிரியர்கள் 36 பேருக்கு பாராட்டு விழா நடந்தது.பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற காரணமாக இருந்த அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். தாளாளர் நாகசுப்ரமணியன் தலைமை வகித்தார். மதுரை கல்லுாரி பள்ளி ஆசிரியர் ஜெயச்சந்திரராஜன், சேதுபதி பள்ளி ஆசிரியர் இந்திரா தேவி வரவேற்றனர். சமூக அறிவியல் வளர்ச்சி கழக நிர்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்குமார் பரிசு வழங்கினார். சவுராஷ்டிரா பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிகுமார், மாநகராட்சி பள்ளி ஆசிரியர் முருகன் பங்கேற்றனர். - கருத்தரங்கு மதுரை: யாதவர் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு முதல்வர் ராஜூ தலைமையில் நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் வரவேற்றார். தலைவர் ஜெயராமன், செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஓட்டல் நிறுவனர் கண்ணன் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் கிருஷ்ணவேணி, இயக்குநர் ராஜகோபால், உளவியல் ஆலோசகர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எஸ்எஸ்., திட்ட அலுவலர் கோதைசெல்வி நன்றி கூறினார்.