பேராசிரியைக்குவிஞ்ஞானி விருது
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மூலக்கூறு நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியை வரலட்சுமிக்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மன்றம் (டான்சா) சார்பில் 2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு விஞ்ஞானி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆண்டுதோறும் டான்சா சார்பில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பு, காப்புரிமை பெறுதல், முனைவர் பட்டத்திற்கான வழிநடத்துதல், ஆராய்ச்சிக்கான நிதி பெற்று, திட்டங்களை செயல்படுத்துதல், ஆராய்ச்சிகளுக்காக இவ்விருதுக்கு பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன்அடிப்படையில் வரலட்சுமி தேர்வாகி உள்ளார். இவர் ஏற்கனவே இளைய விஞ்ஞானி உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். அமெரிக்க நுண்ணுயிரியல் சங்கத்தின் ஆசிய ஆலோசகராக பணியாற்றுகிறார்.