உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கீழடியில் இரண்டு ஏக்கரை மட்டும் தோண்டிவிட்டு மூடியது ஏன் சீமான் கேள்வி

கீழடியில் இரண்டு ஏக்கரை மட்டும் தோண்டிவிட்டு மூடியது ஏன் சீமான் கேள்வி

அவனியாபுரம்:'கீழடியில் இரண்டு ஏக்கரை மட்டும் தோண்டிவிட்டு மூடியது ஏன். அதற்கு மேல் தோண்டினால் தமிழர்களின் தொன்மை தெரிந்துவிடும்,' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு மூக்கையா தேவர் பெயர் வைக்க கூடாதா. மதுரை விமான நிலையத்திற்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயர் வைக்க கூடாதா. செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம். தமிழ் செம்மொழியாக இருந்ததா அல்லது கருணாநிதி சொன்னதால் செம்மொழியாக ஆனதா.கீழடியில் இரண்டு ஏக்கரை மட்டும் தோண்டிவிட்டு மூடியது ஏன். அதற்கு மேல் தோண்டினால் தமிழர்களின் தொன்மை தெரிந்துவிடும். அவர்கள் இந்திய நாகரிகம் என்கிறார்கள். நீங்கள் திராவிட நாகரிகம் என்கிறீர்கள். ஏன் தமிழர் நாகரிகம் என்று சொல்ல வலிக்கிறதா.பா.ம.க., வில் அன்புமணி, ராமதாசிற்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு கட்சி பிரச்னை. சரியாகும், சரி செய்யணும். நானும் இருவரையும் சந்திப்பேன். பா.ம.க., தேர்தல் வெற்றிக்காகவோ அரசியல் லாபத்திற்காக உருவாக்கப்பட்டது அல்ல. தமிழ் சமூகத்திற்காக குடிமகனின் வேலை வாய்ப்பு, கல்விக்காக உருவாக்கப்பட்டது. எந்த கட்சியில் கருத்து முரண்பாடு இல்லை.பா.ஜ.,வினர் தி.மு.க., வை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். தி.மு.க.,வினர் பா.ஜ., வை வளர விடக்கூடாது என்கிறார்கள். இருவருமே மக்கள் நலன் சார்ந்து இல்லை. என்னுடைய கனவு இருவரையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் நீண்ட நாட்களாக 'ஒன்னா' நிற்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ