உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாகனங்களுக்கு தீ வைப்பா

வாகனங்களுக்கு தீ வைப்பா

திருநகர்:திருநகர் தனக்கன்குளம் பைபாஸ் சாலை சீனிவாசா காலனியில் தனியார் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில் 2 கார்கள், 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் தீயில் எரிந்தன. அக்கம்பக்கத்தினர் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விரைந்து சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதி ஒரு கார், இரண்டு டூவீலர்கள் முழுமையாக கருகின. இது சம்பந்தமாக சிலரிடம் திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை