உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திட்டமிடாத பணியால் வீதிகளில் சாக்கடை 

திட்டமிடாத பணியால் வீதிகளில் சாக்கடை 

ஊமச்சிகுளம் : மதுரை மாநகராட்சி 7வது வார்டு ஸ்ரீராம் நகரில் கழிவுநீர் கால்வாய் திட்டமிடாமல் கட்டப்பட்டதால் வீதிகளில் சாக்கடை நீர் பாயும் அவலம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.இப்பகுதியைச் சேர்ந்த உக்கிரபாண்டி கூறியதாவது: பதிமூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. பாதாள சாக்கடை, ரோடு, மின்விளக்கு எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளை சுற்றி தேங்கிவிடுகிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாது.கழிவுநீர் செல்லவும், மழைநீர் வடியவும், ரூ.பல லட்சம் செலவில் கட்டியகழிவுநீர் வாய்க்கால் ரோட்டை விட அதிக உயரமாக உள்ளது.இதனால் தண்ணீர் வாய்க்காலுக்கு வெளியே தேங்கி நிற்கிறது. கால்வாயை மறைத்து கட்டிய பாலத்தை திட்டமிடாமல் கட்டியதால் டூவீலரில் கூட செல்ல முடியவில்லை. பலமுறை மாநகராட்சியில் புகார் கொடுத்தும் பயனில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை