உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தமுக்கத்தில் ஷாப்பிங் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது

 தமுக்கத்தில் ஷாப்பிங் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை எகனாமிக் சேம்பர் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 நாள் 'ஷாப்பிங் திருவிழா' நேற்று துவங்கியது. 'எஸ்' அமைப்பு தலைவர் நீதிமோகன் திறந்து வைத்தார். எகனாமிக் சேம்பர் முகமதுகான், பொருட்காட்சி தலைவர் வரதராஜன், சங்கத் தலைவர் ஜெகதீசன், துணைத்தலைவர் தனுஷ்கோடி, மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி கலந்து கொண்டனர். உணவு, மளிகைப் பொருட்கள், பாத்திரங்கள், நகைகள், சேலை, சுடிதார், அலங்காரப்பொருட்கள் உட்பட 200 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநில உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, உணவங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் (டிச.28, 29) காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை பொருட்காட்சிக்கான அனுமதி இலவசம். இலவச டிக்கெட் கூப்பன் எண்களின் அடிப்படையில் தினமும் மதியம் 2:00, மாலை 5:00 மணி, இரவு 7:00, இரவு 9:00 மணிக்கு குலுக்கல் முறையில் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு நேரத்திற்கு 12 பரிசுகள் வீதம் ஒரு நாளைக்கு 48 பேருக்கு பட்டுச்சேலை, மெத்தை, அரிசி உட்பட பரிசுகள் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு தனிப்பரிசு உண்டு. நாளை (டிச. 29) நிறைவு நாளன்று மெகா பம்பர் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி