உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுதானிய மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு

சிறுதானிய மதிப்பு கூட்டிய பொருள் தயாரிப்பு

திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கான அமைப்பு என்னும் திட்டத்தின் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்க மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலர் விஜயராகவன் துவக்கி வைத்தார். தமிழ் உணவுகள் நிறுவன இயக்குனர் வெங்கடேசன், தமிழ்ச்செல்வி பேசினர். கம்பு, தினை, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாலியில் லட்டு, அடை, கட்லட், அல்வா, பாயாசம், கேசரி தயாரிக்க பயிற்சி அளித்தனர். கல்லுாரி உணவு துறை பேராசிரியர்கள் சரஸ்வதி, அனிதாஸ்ரீ, மகேஸ்வரி, கவிதா பயிற்சி அளித்தனர். ஊட்டச்சத்து துறை தலைவர் கோபிமணிவண்ணன் விளக்கினார். பேராசிரியர் அழகேசன் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை