உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையில் தீயால் புகை மண்டலம்

குப்பையில் தீயால் புகை மண்டலம்

திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சியில் குப்பை சேகரிப்பதற்காக ஆங்காங்கே பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பகலில் வீடுகளில் பெறப்படும் குப்பை, இந்தக் குப்பை தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. குப்பை கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதில்லை. பதிலாக இரவு நேரத்தில் இந்த குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது.இதனால் எழும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை, இரவு முழுவதும் கிராமம் முழுவதும் பரவுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் துாக்கம் தொலைக்கின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூச்சுத் திணறலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைக்கு தீவைப்பதை தவிர்க்க வேண்டும். குப்பையை உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை