உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பள்ளிக்குள் புகுந்த பாம்பு

 பள்ளிக்குள் புகுந்த பாம்பு

மதுரை: மதுரை உலகனேரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் வகுப்பறைக்கு சென்றனர். கழிப்பறைக்குள் 5 அடி நீள சாரைப்பாம்பு புகுந்தது. மாணவியர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆசிரியர்கள் ஒத்தக்கடை பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வருவதற்குள் வளாகத்தில் இருந்த பாம்பு புதருக்குள் மறைந்தது. நீண்ட நேர தேடுதலுக்கு பின் அந்த பாம்பை லாவகமாக பிடித்த பரமஸ்வரன், அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ