தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார்: பள்ளப்பட்டியில் சூறாவளி மழைக்கு மின்கம்பங்கள் சாய்ந்து 10 நாட்களுக்கு மேலாக மின்சப்ளை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிதாக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டு மின் சப்ளை கொடுக்கப்பட்டது.