| ADDED : பிப் 28, 2024 04:58 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் வேளாண் விரிவாக்க மையம் சிதிலமடைந்து இருந்ததால் விவசாயிகள் அலுவலகத்திற்கு அச்சத்துடனே வந்து சென்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து வேளாண் துறை சார்பில் ரூ.2.42 கோடியில் வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் இணை இயக்குநர் சுப்புராஜ், செயற்பொறியாளர் முரேஷ்குமார், துணை இயக்குநர்கள் லட்சுமி பிரபா, ரேவதி, உதவி இயக்குநர் சுபாசாந்தி, விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு இளைஞரணி தலைவர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.