மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு
01-Aug-2025
சோழவந்தான்; சோழவந்தான் அருகே வடகாடுபட்டி- விக்கிரமங்கலம் இடையே 150 மீ. நீளத்திற்கு ரோடு அமைக்காதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் அமைத்து பொது நிதியின் கீழ் ரூ.5.42 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு அமைக்க எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் பூமிபூஜை நடந்தது. தாசில்தார் ராமச்சந்திரன், பி.டி.ஓ.,க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, உதவி பொறியாளர் மாலதி, ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், இளைஞரணி வெற்றிச்செல்வன், விளையாட்டு அணி திலீபன் உட்பட பலர் பங்கேற்றனர். கொட்டாம்பட்டி கே. புதுாருக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் மீது தனியார் கல்குவாரி கழிவுகளை கொட்டியதால் குழாய் உடைந்தது. அதனால் 30 நாட்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படவே ஊற்று நீரை பருகும் அவலம் நிலவியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., செல்லபாண்டியன் ஏற்பாட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்தனர்.
01-Aug-2025