உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு சொற்பொழிவு

சிறப்பு சொற்பொழிவு

மதுரை: மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் செயல்படும் தமிழ்க் காட்சிக் கூடத்தில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. சங்க இயக்குனர் அவ்வை அருள் தலைமை வகித்தார். விருதுநகர் செந்திகுமார் நாடார் கல்லுாரி உதவிப் பேராசிரியர் தங்கமாரி, பழந்தமிழ் இலக்கியத்தில் புலப்பாட்டு நெறி' என்ற தலைப்பில் பேசுகையில், ஒரு கருத்தை பிறர் அறியும் வகையில் எடுத்துக் கூறுவது புலப்பாட்டு நெறி. இதில் தமிழர்கள் மிகவும் தேர்ந்தவர்களாக இருந்தனர். நற்றிணை, கலித்தொகை உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நுால்களின் ஒவ்வொரு பாடலிலும் இந்த புலப்பாட்டு நெறி வெளிப்படுகிறது'' என்றார். காட்சிக்கூட விளக்குனர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !