உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிக் தொழிலாளருக்கு சிறப்பு பதிவு முகாம்

கிக் தொழிலாளருக்கு சிறப்பு பதிவு முகாம்

மதுரை: இணையம் வாயிலாக அமேசான், பிலிப்கார்ட், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற இணையதள நிறுவனங்களில் பணிபுரியும் 'கிக்' (GIGW) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இத்தொழிலாளர்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம். பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம் போன்ற நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. எனவே இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள் தங்கள் பிறப்பு சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல், நகல் ஆவணங்கள், போட்டோ, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசியுடன் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம். மதுரை எல்லீஸ் நகர் வீட்டுவசதி வாரிய வளாகம் முதல் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகிறது என, உதவி ஆணையர் பாரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ