உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

மதுரை : உலக கால்நடை தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் கொக்குளம் கிராமத்தில் நடந்தது.மதுரை மண்டல இணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். திருமங்கலம் கோட்ட உதவி இயக்குநர் சரவணன் முன்னிலை வகித்தார்.செக்கானுாரணி, சிந்துபட்டி கால்நடை உதவி டாக்டர்கள் மாணிக் சந்தர், கஜேந்திரன், கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் பழனிவேல், சிவசீலன், உமாராணி, கனகராஜ் கலந்து கொண்டனர்.கால்நடை ஆய்வாளர்கள் பிரபாகரன், பாண்டிச்செல்வி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாசாணம் ஆகியோர் சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி