உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு பயிற்சி முகாம்

விளையாட்டு பயிற்சி முகாம்

மதுரை: விளையாட்டில் ஆர்வமுள்ள 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏப். 25 முதல் மே 15 வரை 21 நாட்கள் நடக்கவுள்ளது.தடகளம், வாலிபால், ஹேண்ட்பால், கால்பந்து, ஹாக்கி போட்டி பயிற்சி பெற ஏப். 25 காலை 6:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பெயரை பதிவு செய்து முகாமில் பங்கேற்கலாம். காலை 6:30 முதல் 8:00 மணி, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும், சிற்றுண்டி, பங்கேற்புச் சான்று வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முகாமை நடத்துகிறது.ஜிம்னாஸ்டிக், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியும் நடைபெறும். டேபிள் டென்னிஸ், நீச்சல், பாட்மின்டன் போட்டிக்கு கட்டணம் உண்டு. விளையாட்டு விடுதியில் சேர விரும்புவோரும் இம்முகாமில் பயிற்சி பெறலாம் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ