உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்

அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்

திருமங்கலம்: திருமங்கலத்தில் இருந்து விமான நிலைய ரோடு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு 37 எண் மகளிருக்கான இலவச பஸ் நேற்று மாலை 5:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணித்த 3 மாணவர்கள் கீழே விழுந்தனர். பேருந்து மிகமெதுவாக சென்றதால் மாணவர்கள் சிறிய காயங்களோடு தப்பினர். பஸ் நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

theruvasagan
செப் 19, 2025 11:01

மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தில் 77 கோடி தடவை அவர்கள் பயனடைந்து இருப்பதால் பஸ் படிக்கட்டு உடைஞ்சு போச்சு சீட்டு.பேர்நது போச்சு கூரை பிச்சுகிட்டு போச்சு டயர் கழண்டு ஓடிப்போச்சு ஓய்வு பெற்ற.ஊழியர்களுக்கு பென்ஷன் குடுக்க நிதியில்லை என்கிற சில்லறை விஷயங்களுக்கெல்லாம் நம்பர் ஒன் அரசை குறை சொல்லக் கூடாது.


அப்பாவி
செப் 19, 2025 08:08

ஏறிப் போறதுக்கு படி. ஒரு மூட்டை மாணவர்கள் புத்தக மூட்டையோடு நின்னா உடையாம என்ன செய்யும்? கார்விலை குறைஞ்சிருக்காம். கார் வாங்கிக்கோங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை