மேலும் செய்திகள்
5 தொகுதிகள் கேட்டுள்ளோம் ஏ.சி.சண்முகம் பேட்டி
8 hour(s) ago
மதுரை- சினிமா- 02.03
8 hour(s) ago
டூவீலர் மீது வேன் மோதல் இருவர் பலி, ஒருவர் காயம்
9 hour(s) ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டிய பின்பும், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கற்கும் நிலையே உள்ளது.சிவராமன்:மந்தைதிடல், நாடக மேடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தற்போது செயல்படும் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு கட்டடங்கள் சேதமடைந்ததால் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக கால்நடை மருத்துவமனை எதிரே, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 18.80 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டடத்தை சுற்றி சீமைக்கருவேல் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து விட்டன.தற்போதுள்ள பள்ளி கட்டடத்திலும் அருகில் உள்ள பள்ளி கட்டடத்திலும் ஐந்து வகுப்பறைகளில் 1 முதல் 8 வகுப்பு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஸ்மார்ட் வகுப்புக்கான கருவிகளும் ஒரு வகுப்பறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.நெருக்கடியால் பல நேரங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் அடியில் அமரவைத்து பாடம் நடத்தப்படுகிறது என்றார்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago