உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மானிய உரம் பெற அடையாள எண்

மானிய உரம் பெற அடையாள எண்

மதுரை: விவசாயிகள் மத்திய அரசின் மானிய உரங்களைப் பெற தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்’’ என, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகளுக்கு ஆதார் எண் அடிப்படையில் மானிய விலையில் உரங்கள் விற்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு எப்.எப்.எஸ்., எனப்படும் செயலியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் உரம் பெற வழிகாட்டியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர் வகை, சாகுபடி பரப்பின் அடிப்படையில் உரம் வழங்கப்படும். இந்த செயலியில் பதிவதற்கு ஆதார் எண், விவசாய நிலத்தின் சர்வே எண்களை இணைத்து உழவர் அடையாள எண் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே உழவர் அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகள் நிலத்தின் அனைத்து சர்வே புல எண்களையும் முழுமையாக இணைக்க வேண்டும். இந்தச் செயலி மூலம் பதிவு செய்வது தொடர்பாக விவசாயிகளுக்கு கிராம அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி