உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பால் தற்கொலை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணமிழந்தவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னராஜா 35. தனியார் டிரைவிங் பயிற்சி நிறுவன பயிற்சியாளர். ரூபாபதி என்ற மனைவி, 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர்.சில மாதங்களாக பலரிடம் கடன் வாங்கி ஆன் லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டதால் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறினார்.அவரது மனைவி உசிலம்பட்டி போலீசில் தனது கணவரை 2 நாட்களாக காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 12ல் இரவு 7:00 மணிக்கு சில்லாம்பட்டி பகுதியில் போடிநாயக்கனுார் - மதுரை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை