உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டேக் ஆப்: மதுரை விமானங்களுக்கு ரன்வே நிலங்கள் தயார்: 7 கி.மீ.,க்கு ரிங்ரோடு மாற்றி அமைக்கப்படுகிறது

டேக் ஆப்: மதுரை விமானங்களுக்கு ரன்வே நிலங்கள் தயார்: 7 கி.மீ.,க்கு ரிங்ரோடு மாற்றி அமைக்கப்படுகிறது

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியில் 'ரன்வே' நீட்டிப்புக்காக 7 கி.மீ.,க்கு ரிங்ரோட்டை மாற்றி அமைக்க கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கேற்ப ரன்வே நீட்டிப்பு உட்பட பல பணிகள் நடந்து வருகின்றன. தற்போதுள்ள ரன்வேயை 2 கி.மீ., நீட்டிக்க வேண்டியிருப்பதால் அதற்கேற்ப இடங்களை கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. விரிவாக்க பணிக்காக ராமன்குளம், பாப்பனோடை, பெருங்குடி உட்பட 6 கிராமங்களில் 633 ஏக்கர் நிலங்களை ரூ.200 கோடிக்கு தமிழக அரசு கையகப்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த விரிவாக்கப் பணியில் ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கும்போது, தற்போதுள்ள மதுரை ரிங்ரோட்டை தாண்டியும் 'ரன்வே' அமைக்க வேண்டியுள்ளது.இதனால் ரிங்ரோடு 'கட்' ஆகும் நிலை உள்ளது. எனவே தற்போது ரிங்ரோட்டில் வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியை அடுத்துள்ள ஈச்சனேரி விலக்கு வழியாக ரிங்ரோட்டை மாற்றி அமைத்து கழுவன்குளம், குதிரைக்குத்தி, ராமன்குளம், சோளங்குருணி வழியாக வலையங்குளம் வரை 7 கி.மீ.,க்கு உள்ள ரோட்டை 80 அடி ரோடாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இதில் கழுவன்குளம் சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இக்கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. மேலும் 60 ஏக்கர் அளவுக்கு பட்டா நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே உள்ள ரோட்டில் குதிரைக்குத்தி கிராமத்தில் தற்போது 29.31 சென்ட் நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போதுள்ள ரிங்ரோட்டை பாதிக்காமல், கீழ்பகுதியில் அண்டர் பாஸ் அமைத்து மேல்பகுதியில் 'ரன்வே' இருக்கும்படி அமைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு ரூ.500 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. 633 ஏக்கருக்கு ரூ.200 கோடியைவிட இது 2.5 மடங்கு அதிகமாக உள்ளதே எனக்கூறி 'அண்டர்பாஸ்' திட்டத்தை கைவிட்டுவிட்டனர். அதற்கு பதிலாக ரிங்ரோட்டை மாற்றி அமைக்க உள்ளனர். இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது என்றார்.இந்த விரிவாக்கப் பணியில் ரன்வேயின் நீளத்தை அதிகரிக்கும்போது, தற்போதுள்ள மதுரை ரிங்ரோட்டை தாண்டியும் 'ரன்வே' அமைக்க வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை