மேலும் செய்திகள்
மதுரை காமராஜ் பல்கலையில் 3 மாதங்களாக சம்பளமில்லை
03-Mar-2025
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பதிவாளர் உட்பட உயர் பதவிகள் நியமனத்திற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில் கன்வீனர் குழுவில் கவர்னர் பிரதிநிதி சிண்டிகேட் உறுப்பினரை இடம் பெற செய்யாமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது.இப்பல்கலையில் துணைவேந்தர் பணியிடம் 6 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குநர், உதவி தேர்வாணயர் என 5 முக்கிய உயர் பதவிகளும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. துணைவேந்தர் இல்லாத நிலையில் நிர்வாக பணிகளை கவனிக்க கல்லுாரிக் கல்வி கமிஷனர் சுந்தரவள்ளி தலைமையில் கன்வீனர் குழுவை அரசு அமைத்துள்ளது.இக்குழுவில், கவர்னர் பிரதிநிதி வாசுதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் பிரதிநிதி தவமணி கிறிஸ்டோபர், பல்கலை பேராசிரியர் பிரதிநிதி மயில்வாகனன் இடம் பெற்றனர். இதில் வாசுதேவன் பதவிக் காலம் முடிந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு காரணமாக தவமணி கிறிஸ்டோபர் நீக்கப்பட்டார். வாசுதேவன் மட்டும் உள்ளார். கவர்னர் பிரதிநிதி உட்பட 2 உறுப்பினர்கள் பதவி 4 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளன.இதையடுத்து நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், கன்வீனர் குழுவில் காலியாக உள்ள கவர்னர் உறுப்பினர் பிரதிநிதி இடத்தை நிரப்ப வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் குழு தலைவர் அதை ஏற்காமல் ஒத்திவைத்தார். அதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் இடத்தையும் நிரப்ப பேராசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கவர்னர் - தமிழக அரசு முரண்பாடு காரணமாக தமிழக அரசின் 'சிக்னல்' குழு தலைவருக்கு கிடைக்கவில்லை.* உயர் பதவிகள் தேர்வுஇதற்கிடையே பதிவாளர் உட்பட 5 உயர் பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு 110க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இன்று (மார்ச் 25) அந்த விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக திருநெல்வேலி மனோன்மணியம் சந்தரனார் பல்கலை பதிவாளர் சாக்ரட்டீஸ் தலைமையில் பிற பல்கலை பேராசிரியர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு தகுதியுள்ளவர் பட்டியலை தேர்வு செய்து சிண்டிகேட் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவுள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவை கன்வீனர் குழு தான் முடிவு செய்யும். அதில் முழு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை. குறிப்பாக கவர்னர் பிரதிநிதி உறுப்பினர் இல்லை. இது, பதவி நியமனங்களின் அடுத்தடுத்த நிலைகளில் பாதிப்பையோ, விமர்சனத்தையோ ஏற்படுத்தும். எனவே கன்வீனர் குழுவில் கவர்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் பிரதிநிதி உறுப்பினர்களை இடம் பெறச்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதற்கிடையே இப்பல்கலை கல்விப் பேரவை கூட்டம் (ஏ.சி.,) மார்ச் 27, செனட் கூட்டம் மார்ச் 28 ல் நடக்கின்றன. இதில் கன்வீனர் சுந்தரவள்ளி பங்கேற்கிறார். அப்போது பல்கலையில் நிலவும் சம்பள பிரச்னை குறித்து பலர் கேள்வி எழுப்ப உள்ளனர். அதையடுத்து ஒற்றை உறுப்பினருடன் செயல்படும் கன்வீனர் குழுவில் காலியாக உள்ள உறுப்பினர்கள் இடத்தை ஏன் நிரப்பவில்லை என்பது குறித்தும் கேள்வி எழுப்ப உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
03-Mar-2025