| ADDED : டிச 25, 2025 06:21 AM
மதுரை: தேசிய கபடிப் போட்டிக்கான தமிழக அணி பயிற்சி முகாம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (பி.எம்.டி.,) கல்லுாரியில் நடக்கிறது. குஜராத்தில் 72 வது சீனியர் ஆண்கள் தேசிய கபடி போட்டி பிப். 24 முதல் 27 வரை நடக்க உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் கபடி போட்டி நடத்தப்பட்டு தமிழக அணி சார்பில் 38 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இரண்டு மாத கால பயிற்சி முகாம் பி.எம்.டி., கல்லுாரியில் துவங்கியது. தமிழக அணி பயிற்சியாளர் அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்,''மதுரையில் இருந்து செக்கானுாரணி தருண் 22, செல்லுார் அஜய் 21 தமிழக அணிக்கு தேர்வாகினர். ஆசிய சாம்பியன் கபடி போட்டி ஜப்பானில் வரும் ஆகஸ்டில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணித்தேர்வு போட்டியில் திருச்சி வீரர்கள் தீபக், சதீஷ் தேர்வாகினர். அவர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.