உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரிஷபம் விவசாயிகளுக்கு ரோடு வசதி வேண்டும் 

ரிஷபம் விவசாயிகளுக்கு ரோடு வசதி வேண்டும் 

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ரிஷபத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்ல ரோடு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விவசாயி முருகேசன்: இப்பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஊருக்குள் வரும் ரோடு ஊராட்சி அலுவலகத்தோடு முடிகிறது. அதையடுத்துள்ள நிலங்களுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். விவசாய பணிகளின் போது உழுவதற்கு டிராக்டர்கூட செல்ல முடியாது.அறுவடை காலங்களில் வாகனங்கள் இவ்வழியே செல்ல முடியாது. உர மூடைகளை 2 கி.மீ.,க்கு தலைச்சுமையாகவே கொண்டு செல்ல வேண்டும். இப்பகுதிக்கு வாகனத்தில் செல்ல 8 கி.மீ., சோழவந்தான் வழியே சுற்றிச் செல்ல வேண்டும்.இங்கு ரோடு தேவையென 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆறு மாதங்களுக்கு முன் பொதுப்பணித்துறையினர் நிலம் அளவீடு செய்து கற்களை ஊன்றினர்.அதன்பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகள் நலன்கருதி ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை