உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

 வேலைநிறுத்த நாளில் தேர்வா தள்ளிவைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை: 'மதுரையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்த நாளில் மாணவர்களுக்கு இடைப்பருவத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை மாற்றி வைக்க வேண்டும்' என சி.இ.ஓ., தயாளனிடம் வலியுறுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்த ஜாக்டோஜியோ சார்பில் நவ. 18ல் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. அதேநாளில் ஆறு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு 2 ம் இடைப்பருவத் தேர்வை நடத்துவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. போராட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த நாளில் தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் சி.இ.ஓ., தயாளனை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: இத்தேர்வு ஏற்கனவே நவ.10 முதல் 12 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நவ. 17 முதல் 19 வறை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.18 ல் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அந்த நாளில் தேர்வை வைத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. நவ.18 ல் நடக்கும் தேர்வை மாற்றி அறிவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை