உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் ஓய்வூதியம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்

50 சதவீதத்திற்கும் குறைவில்லாமல் ஓய்வூதியம் கோயில் பணியாளர்கள் வலியுறுத்தல்

மதுரை : தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் ஷாஜீராவ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் எஸ்.சுதர்சன், பொருளாளர் த.பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.கோயில் பணியாளர்களுக்கு 6வது ஊதியக்குழு நிர்ணயத்தில் விடுபட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் விலக்கு பெற்ற நிறுவனமாக மாற்ற கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு குறைவில்லாமல் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் மறு வரையறை செய்ய வேண்டும்.கூடுதலாக இசை கலைஞர்களை நியமிக்க வேண்டும். அறநிலையத்துறை பணியாளர்களுக்கு ஈட்டா விடுப்பு 180 நாட்கள் அனுமதிக்க வேண்டும். ஓய்வு பெறும் போது 90 நாட்கள் பணப்பயன் பெறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கும் ஆணையர் பங்குத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ