மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
02-Jul-2025
மதுரை:மதுரை மாநகராட்சி சார்பில் 3 நாட்கள் உணவுத் திருவிழா தமுக்கம் அருகே மாநகராட்சி வாகன காப்பகத்தில் இன்று (ஜூலை 11) துவங்குகிறது. மேயர் இந்திராணி தலைமையில், கமிஷனர் சித்ரா துவக்கி வைக்கிறார்.இத்திருவிழாவில் தினம் மாலை 5:00 மணி முதல் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டி, கழிவுகளிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரித்தல், நெருப்பில்லா சமையல், ஓவியம், கோலம் உட்பட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இதுதவிர கரகாட்டம், மாடுஆட்டம், மயிலாட்டம், கொம்பு, பறை இசை, பொய்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கிழவன் கிழவி ஆட்டம் உட்பட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் மூன்று நாட்கள் நடக்கின்றன.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு ஞாயிறு மாலை 5:00 மணிக்கு பரிசு வழங்கப்படும். உணவுத் திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் 78716 61787ல் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
02-Jul-2025