மேலும் செய்திகள்
உசிலம்பட்டியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
12-Aug-2025
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., தாசில்தார், இன்ஸ்பெக்டரின் குடியிருப்புகள் பழுதடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. உசிலம்பட்டியில் பயணியர் விடுதி ரோட்டில் கோர்ட், ஆர்.டி.ஓ., தாசில்தார், நெடுஞ்சாலைத்துறை, அருகில் டி.எஸ்.பி., அலுவலகம் என ஒருங்கிணைந்து உள்ளது. இத்துறை அலுவலர்களுக்கான குடியிருப்புகளில் அதிகாரிகள் தங்கி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதி பாதுகாக்கப்பட்டவையாக இருந்தது. அலுவல் பணியாக வரும் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பயணியர் விடுதியில் வந்து தங்குவர். இவ்விடுதி பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தங்கும் குடியிருப்பு கட்டடங்களின் மேல்தளத்தின் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத இக்கட்டடங்களில் அதிகாரிகள் தங்க தயங்கி வெளியூரில் தங்குகின்றனர். ஏதாவது பிரச்சனையென்றால் பல கி.மீ., பயணித்து சம்பவ இடத்திற்கு தாமதமாக வரவேண்டியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகளின் வீடுகளை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12-Aug-2025