உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழுதான பாலம் புதிதாக கட்டப்படுமா காத்திருக்கும் குறவன்குளம் மக்கள்..

பழுதான பாலம் புதிதாக கட்டப்படுமா காத்திருக்கும் குறவன்குளம் மக்கள்..

அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே பெரியாறு பாசன கால்வாயில் தடுப்புச் சுவரில்லாத பழுதடைந்த பாலத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.அலங்காநல்லுாரில் உள்ள பள்ளிகள், மருத்துவமனை மற்றும் நகர் பகுதிக்கு குறவன்குளம் கிராமத்தினர் பாலத்தை கடந்து செல்கின்றனர். அதேபோல் நடுநிலைப்பள்ளி, ரேஷன் கடைக்கு முனியாண்டிபுரம் பகுதியினர் வந்து செல்கின்றனர். டூவீலர் மட்டுமே செல்லும் அளவிலான பழமையான பாலத்தின் தடுப்புச் சுவர் கற்கள் பல ஆண்டுகளுக்கு முன் பெயர்ந்து விழுந்தது. அடிபகுதியும் வலுவிழந்துவிட்டது.இந்த பாலம் வயதுடைய அழகாபுரி காலனி பாலம் கடந்த மார்ச்சில் இடிந்து விழுந்தது. இப் பாலம் இடிந்தால் கிராமத்தினர் 3 கி.மீ.,க்கு மேல் வீணாக அலைய வேண்டும். பழமையான பாலத்தை அகற்றி புதிதாக கட்ட கிராமத்தினர் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி