உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொட்டியை அழுத்தும் அரசமரம்

தொட்டியை அழுத்தும் அரசமரம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தச்சம்பத்தில் மேல்நிலைத் தொட்டியை அழுத்தும் அரச மரத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த நல்ல குமார் கூறியதாவது:: இங்கு பஸ் ஸ்டாப் பிள்ளையார் கோவில் பின்புறம் பல ஆண்டுகள் பழமையான அரச மரமும், அருகே மேல்நிலைக் குடிநீர் தொட்டியும் அமைந்துள்ளன. மரம் தடித்த கிளைகளுடன் நன்கு படர்ந்து வளர்ந்துள்ளது. தொட்டியின் மேல்பகுதியும்மரத்தின் கிளையும் அருகருகே அமைந்துள்ளன. இதனால் காற்று வீசும் போது மரம் அசைந்து கிளைகள் தொட்டியின் மீது மோதி அழுத்துகிறது. இதனால் பலத்த சத்தம் ஏற்படுகிறது. தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து மரம் அழுத்துவதால் தொட்டி உடைந்து விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. மரத்தின் கிளைகளை வெட்டுவதன் மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ