மேலும் செய்திகள்
ஆடிப்பட்ட விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம்
04-Aug-2025
பேரையூர்: பேரையூர் பகுதியில் மழை இல்லாமல் வெயில், காற்று அடிப்பதால் ஆடிப்பட்டத்தில் விவசாயப் பணிகளை துவக்கிய விவசாயிகள் கவலையில் உள்ளனர். பேரையூர், டி.கல்லுப்பட்டி, சாப்டூர், சேடபட்டி, அத்திபட்டி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆடிப்பட்டத்தின் போது சாகுபடி பணிகளை துவக்கினர். தற்போது மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, சோளம் உள்ளிட்டவற்றை விதைத்துள்ளனர். விதைக்கும்போது போதிய மழை இல்லாததால் விதைகள் முளைக்காமல் உள்ளது. அவற்றை பறவைகளே இரையாக்கி வருகின்றன. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பாதிப்புக்குள்ளான விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்தவை போதிய மழை இன்றி முளைத்து கருகியது. இந்தாண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து ஒரு மாதமாகிவிட்டது. மழை இல்லாமல் விதைகள் முளைக்கவில்லை. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. மாலையில் காற்று அதிகமாக வீசுகிறது. மழைக்கு வாய்ப்பு இல்லாதது போல் தெரிகிறது. இனி மழை பெய்தாலும் மறு விதைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது என்றனர்.
04-Aug-2025