உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு

அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் திறப்பு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் நிறுவனத்தின் நிதியில் கட்டப்பட்டு வரும் அறுவை சிகிச்சை வளாகம் பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வளாகம் ரூ.150 கோடி மதிப்பில் 2021, ஏப்.,26ல் தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் பணிகள் முடியும் என கூறப்பட்டாலும் கருணாநிதி நுாலக கட்டுமானமும் துவங்கியதால் அறுவை சிகிச்சை வளாக கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. 2023, டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. பிப்ரவரியில் கட்டடம் திறக்கப்பட உள்ள நிலையில் இறுதிகட்ட பணிகளை மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடலுறுப்பு தானம் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் உறுப்புகளுக்காக காத்திருக்கும் நோயாளிகள் வாழ்வு பெறுவர்'' என்றார். டீன் ரத்தினவேல், ஆர்.எம்.ஓ., சரவணன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை