உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகாபுரியில் மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி கிராமத்தினர் அதிருப்தி

அழகாபுரியில் மின்கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி கிராமத்தினர் அதிருப்தி

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அழகாபுரியில் சாலையோர மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.அ.புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி வழியாக கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதான சாலை சந்திப்பு வரை சாலையில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு செய்து சாலையோர மின் கம்பங்களில் அம்புக்குறி உடன் நகர்த்தப்பட வேண்டிய அளவினை எழுதி உள்ளனர். அழகாபுரியில் 20 மின்கம்பங்களை அகற்றாமல் நடக்கும் சாலை பணிக்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது: மின் கம்பங்களை நகர்த்த இடையூறாக இருக்கும் என மரங்களை வெட்டினர். ஆனால் தற்போது மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைக்கின்றனர். இதனால் சாலை விரிவாக்கத்தின் நோக்கம் வீணாகும். மின் கம்பங்களால் விபத்து அபாயம் உள்ளது. பெரியாறு பாசன கால்வாய் பாலத்தை ஒட்டிய வளைவில் சிறு கிணற்றுக்காக ஆபத்தான முறையில் தடுப்புச் சுவர் கட்டியுள்ளனர். மற்றொரு இடத்தில் அபாய கிணறு உள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அலங்காநல்லுார் உதவி மின் பொறியாளர் செந்தில்: 3 இடத்தில் மாற்று மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இடைவெளியுடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி தந்தால் 2 நாளில் வேலை முடிக்கப்படும் என்றார்.வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ்பாபு: அளவீடு படி சில இடங்களில் மின் ஒயர்கள் வீடுகள் மேல் செல்கிறது. தனியார் இடத்தில் அமைக்க உரிமையாளர்கள் அனுமதி தர மறுக்கின்றனர். தாசில்தார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ