உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாழ்க்கைனா மேடு, பள்ளம் இருக்கும் தத்துவம் சொல்லும் திருமங்கலம் ரோடு

வாழ்க்கைனா மேடு, பள்ளம் இருக்கும் தத்துவம் சொல்லும் திருமங்கலம் ரோடு

திருமங்கலம்: திருமங்கலம் காமராஜபுரம், கற்பக நகர் பகுதி ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் 'வாழ்கைனா மேடு, பள்ளம் இருக்கும்' என சொல்கிறதோ என நொந்துக்கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.இப்பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்க பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் தார் ரோடு அமைக்கப்பட்டது. சிறிய அளவிலான வாகனங்கள் சென்று வரும் வகையில் இந்த ரோடுகள் அமைக்கப்பட்ட நிலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் ரோடு மேடு பள்ளமாக மாறி உள்ளது. ரோட்டில் ஒரு பகுதி முற்றிலும் 'இறங்கி' 2 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்றொரு பகுதியில் இரண்டு அடி வரை மேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சிறிய ரக கார்கள் கடந்து செல்லும் போது விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது.மேலும் நகராட்சி சார்பில் 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து பகுதிகளிலும் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன் அமைக்கும் பணி நடந்தது. அவசரகதியில் நடந்த இந்த பணி காரணமாக ரோடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் இந்த பள்ளம் முழுமையாக மூடப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு, தற்போது மழை காலம் என்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி, ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த ரோடுகளை முழுமையாக சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை