உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று இனிதாக ... (23.11.2025) மதுரை

இன்று இனிதாக ... (23.11.2025) மதுரை

கோயில் கோபுரங்களுக்கு பாலாலய பூஜை: மகா கணபதி கோயில், கணபதி நகர், விளாங்குடி, காலை 10:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. வேங்கடரமண பாகவத சுவாமிகளின் மூல நட்சத்திர தின அபிஷேகம், பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, பாடுபவர்கள் - நீலாராவ், கிரிதர்லால், சந்திரசேகர், மிருதங்கம் - சுதர்சன், புல்லாங்குழல் - மனோகர், காலை 9:00 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை : நிகழ்த்துபவர் -- பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. சுவாமி ராமக்கிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. சித்த வேதம்: நிகழ்த்துபவர் - சண்முகத் திருக்குமரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி . 'அர்ஜூனன், ஏகலைவன் யார் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்' விளக்கவுரை: நிகழ்த்துபவர் - ஓய்வுபெற்ற பேராசிரியர் மூர்த்தி, விவேகானந்தர் நுாலகம், வடக்குத்தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:00 மணி. குண்டலினி தியானம் பற்றிய சத்சங்கம், கூட்டுப் பிரார்த்தனை: உலக சமாதான கோயில், தெப்பக்குளம், மதுரை, மாலை 6:00 மணி. பொது ஜெர்மன் நாட்டின் அஞ்சல்தலை வரலாறு கருத்தரங்கம்: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, மதுரை, தலைமை: சுவாமியப்பன், சிறப்புரை: கனியரசு, ஏற்பாடு: அஞ்சல்தலை நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை. யாதவ வரன்கள், பெற்றோர் சந்திப்புக் கூட்டம்: யாதவ வாலிபர் சங்கம், 308 ஏ, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: யாதவ திருமணத் தகவல் மையம், காலை 10:00 மணி முதல். மனநல, உடல்நலத்திற்கான ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை துணை மருத்துவ அலுவலர் விவேக், முன்னிலை: காந்திய கல்வி ஆராய்ச்சி மையம் முதல்வர் தேவதாஸ், காலை 10:00 மணி, இலவச மருத்துவ முகாம்: மதியம் 12:15 முதல் 1:15 மணி வரை. டி.என்.பி.எஸ்.சி., பொதுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்: கோவிந்ததாச சேவா சமாஜம், 25, மகால் 6வது தெரு, மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இலவச மிருதங்கம், ஹார்மோனிய வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதியம் 12:00 முதல் மதியம் 3:00 மணி வரை. கண்காட்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி சந்தைப்படுத்தும் சரஸ் மேளா உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை. பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2 வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ