உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / அக். 5 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக். 5 க்குரியது

கோயில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் - உற்ஸவ சாந்தி: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் மதுரநாயகம், இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 6:00 மணி. ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. திருக்குறள் கண்ணாடியில் நிலைத்தவர்கள்: நிகழ்த்துபவர் - கணேசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் - விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி நிர்வாகிகள், நன்னெறி வகுப்பு ஆசிரியர்கள் முகாம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் நாராயணன், சிறப்புரை: சாந்திகுமார சுவாமிகள், ஏற்பாடு: திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், காலை 9:30 மணி. திருக்குறள் திருப்பணிகள் - தொடர் வகுப்புகள்: மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்சி வழங்குபவர்: திருக்குறள் மாமன்ற தலைவர் ராஜேந்திரன், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை. பொது கல்வியாளர்கள், சாதனையாளர்கள் பங்கேற்கும் மாநில மாநாடு: ஏ.வி.மஹால், காளவாசல், மதுரை, தலைமை: தலைவர் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், ஏற்பாடு: அகில இந்திய குலாளர் கலை அறிவியல் ஆன்மிக சேவை அறக்கட்டளை, காலை 9:30 மணி. மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க ஆண்டுவிழா, 'வீ பை' ஆன்லைன் வர்த்தக செயலி துவக்க விழா: சி.ஆர்.மஹால், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, தலைமை: பேராசிரியர் சாலமன் பாப்பையா, முன்னிலை: தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், சிறப்பு விருந்தினர்கள்: காளிமார்க் நிறுவன நிர்வாக இயக்குநர் ரமேஷ், நாகா நிறுவன இயக்குநர் சவுந்தர் கண்ணன், நடராஜ் ஆயில் மில் நிர்வாக இயக்குநர் செந்தில்நாதன், உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர், காலை 9:30 மணி. ராதா கல்யாண மஹோத்ஸவம்: பிராமண கல்யாண மஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தய்யர், உஞ்வர்த்தி, காலை 8:00 மணி, ஆய்க்குடி ஆனந்தகிருஷ்ணனின் அபங்க திவ்ய நாமம், ராதா கல்யாண உத்ஸவம், ஆஞ்சநேய உத்ஸவம், மஹா தீபாராதனை, காலை 9:00 மணி முதல், அன்னதானம், ஏற்பாடு: தமிழ்நாடு பிராமண ஸமாஜம், மதியம் 1:00 மணி. காந்திய சிந்தனை, வள்ளலார் கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: பேராசிரியர் வளர்மதி, ஆசிரியர் அண்ணாதுரை, பட்டிமன்ற பேச்சாளர் ஜெயசுதா, வள்ளலார் பக்தர் சாய்கணேஷ், காலை 10:30 மணி. காந்தி, வள்ளலார் பிறந்தநாள் விழா: மீனாட்சி மஹால், மேலமாரட் வீதி, மதுரை, தலைமை: அறக்கட்டளை அறங்காவலர் பொற்கை பாண்டியன், ஏற்பாடு: அகில இந்திய தமிழ் மாமன்றம் அறக்கட்டளை, காலை 8:45 மணி. தென்மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாடு: வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, தலைமை: மாநில பொதுச் செயலாளர் முஜீபுர் ரஹ்மான், சிறப்புரை: மாநிலத் தலைவர் அப்துல் கரீம், தணிக்கைக்குழு தலைவர் சுலைமான், மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஏற்பாடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மதியம் 3:30 மணி, கண்காட்சி, மதியம் 2:30 மணி முதல். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் இசை நிகழ்ச்சிகள்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சூர்யகலாவின் பரதநாட்டியம், ஏற்பாடு: ஸத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி. வள்ளலார் அவதார தினம்: வழிபாட்டு மன்றம், பூங்கா அருகில், ஹார்விபட்டி, பங்கேற்பு: ஓய்வுபெற்ற மின் பொறியாளர் ராஜாராம், கொடி ஏற்றம், கொடி வணக்கம், பாராயணம், ஜோதி வழிபாடு, ஏற்பாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், காலை 10:30 மணி. நலிந்தவர்களுக்கு தீபாவளி வஸ்திர தான நிகழ்ச்சி: வசந்த பவனம் திருமண மண்டபம், 40 அடி ரோடு, நாகுபிள்ளை தோப்பு, புது மாகாளிப்பட்டி ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் ராஜ்குமார், ஏற்பாடு: தமிழக சவுராஷ்டிர முன்னேற்ற பேரவை, மாலை 6:00 மணி. வ.உ.சி., பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வு: ஒக்கலிகர் திருமண மண்டபம், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் சண்முகம், சிறப்பு விருந்தினர்: கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், ஏற்பாடு: தியாகத் திருவுருவம் வ.உ.சி., சமூகநலப் பேரவை, காலை 9:30 மணி. விளையாட்டு கல்லுாரி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை அத்லெட்டிக் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:30 மணி. மருத்துவம் ஆறு வயதுக்குட்பட்ட பிறவி காது கேளாத, வாய் பேசாத குழந்தைகளை இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தல், அனைத்து வயதினருக்குமான காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம்: ஜமாத் மஹால், தெற்குவாசல் மேலத்தெரு, மதுரை, தலைமை: தலைவர் சீனி அஹமது, துவக்கி வைப்பவர்: தளபதி எம்.எல்.ஏ., ஏற்பாடு: இஸ்லாமிய இளைஞர் அமைப்பு, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ஆடவர், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை