உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில்களை 130 கிமீ வேகத்தில் இயக்க தண்டவாள சீரமைப்பு பணி

ரயில்களை 130 கிமீ வேகத்தில் இயக்க தண்டவாள சீரமைப்பு பணி

மதுரைக் கோட்டத்தில் 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல மாதங்களாக நடைபெறும் இப்பணிகளால் செங்கோட்டை - மயிலாடுதுறை, செங்கோட்டை - ஈரோடு, குருவாயூர் - சென்னை எழும்பூர், நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., ஆகிய முக்கிய ரயில்களில் பயணிக்கும் மதுரை பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பயணிகள் திண்டாட்டம் காரணம், மாதத்தின் அநேக நாட்களில் செங்கோட்டை - ஈரோடு ரயில் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. மற்ற ரயில்கள் மதுரை வராமல் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக மயிலாடுதுறை ரயில் மதுரை வராமல் செல்வதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி பகுதியினர் விருதுநகரில் இறங்கி பஸ்களில் பயணிக்கும் நிலையுள்ளது. குருவாயூர் ரயிலும் பல நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் மதுரை பயணிகள் சென்னை செல்ல பகல் நேரத்தில் ரயில்களின்றி திண்டாடுகின்றனர். பண்டிகை காலங்களில் மேற்கண்ட ரயில்களில் அதிகம் பேர் பயணிக்கும் நிலையில் பராமரிப்பு பணி எனக்கூறி ரயில்வேயின் வருமானமும் குறைகிறது. பலருக்கு ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியாததால் ஸ்டேஷன் வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். வியாபாரம் பாதிப்பு பயணிகள் கூறியதாவது: செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் புதன் தவிர்த்து மற்ற நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. காரணம், புதன் மட்டும் மதியம் 12:30 முதல் 3:30 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 8:20 முதல் மதியம் 12:20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. குருவாயூர் - சென்னை ரயிலையும் மாற்றுப் பாதையில் இயக்குவதால் திண்டுக்கல், திருச்சி செல்வதற்குக்கூட பகலில் ரயில்கள் இல்லை. வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை ஒட்டி இச்சூழல் நிலவுவதால் வியாபாரம் பாதிக்கிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்ட நோக்கமே விரைவாகவும் கூடுதல் ரயில்களை இயக்குவதற்காகத்தான். ஆனால் வேகத்தை மேலும் அதிகரிப்பதாக கூறி இயங்கி வரும் ரயில்களையும் ரத்து செய்து மாற்றுப்பாதையில் இயக்குவதால் ரயில்வே மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே பொங்கலுக்கு பின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். அல்லது ரயில் சேவை பாதிக்காத வகையில் பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றனர். மதுரை: ''மாதந்தோறும் மேற்கொள்ளும் தண்டவாள பராமரிப்பு பணிகளால், பண்டிகை நேரங்களில் பயணிகள் பாதிப்பதை தவிர்க்க மதுரை ரயில்வே கோட்டத்தில் ஜனவரி மாத பணிகளை, பொங்கலுக்கு பின் நடத்த வேண்டும்'' என பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Seyed Omer
டிச 22, 2025 22:37

முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லுபிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரி இரட்டைவழி ரயில்பாதை 12 வருடங்களாக ஆகியும் இன்னமும் முடிவடைய தயக்கம் ஏன் ஓரவஞ்சனை மேலும் சென்னை கண்ணியாகுமரி கிழக்கு கடற்கரைவழிசாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் பட்டுக்கோட்டை ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி முக்காணி ஆறுமுகனேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாமரிக்கு எப்போது ரயி்ல் பாதை அழைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு எப்போது ரெயில்பாதை அமைக்கப்படும்


Lakshmanan .N
டிச 22, 2025 15:41

திருநெல்வேலி டூ சென்னை எழும்பூர் வரை இன்டர் சிட்டி இரயில்கள் இயக்கபடுமா


Ms Mahadevan Mahadevan
டிச 22, 2025 13:35

குரோனா சமயத்தில் நிறுத்திப் பட்டு மீண்டும் சேவை தொடங்கியதில் இருந்து இரயில் சேவை சரி இல்லை. அதைவிட மோசம் இரயில் நிலையங்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டண கொள்ளை. ஒரு நாளைக்கு 50, 40 என்று சொல்லி முடிய வில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை