உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வியாபாரிகள் போராட்டம்

 வியாபாரிகள் போராட்டம்

மதுரை: மதுரை தபால்தந்தி நகர், பாமா நகர் பகுதி ரோட்டில் ஞாயிறு வாரச்சந்தை நடக்கும். இதற்கு அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஞாயிறு காய்கறி விற்பனை சந்தைக்கு மாநகராட்சி மாற்று இடம் ஒதுக்கியது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு நடத்தியும், சந்தை அமைக்கும் பகுதியில் கடைகள் போடவிடாமல் வாகனங்கள் மூலமும் தடுத்தனர். வியாபாரிகள் வாகனங்களின் (டிராக்டர்) டயருக்கு அடியில் படுத்து வாகனங்களை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தை முடிவுறவில்லை. வியாபாரிகள் கூறுகையில், மாற்று இடமாக துர்நாற்றம் அடிக்கும் பகுதியை ஒதுக்கியுள்ளனர். நீதிமன்றத்தை நாடுவோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி