உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

திருமங்கலம்: கள்ளிக்குடி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தில் கே.வெள்ளாகுளத்திங் விவசாயிகளுக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த பயிற்சி நடந்தது.வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா துவக்கி வைத்து மண்ணின் பயன்கள் மற்றும் மண் மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் மகாராஜன், மண்நயம் மற்றும் நீர் பாதுகாப்பு முறைகள்' பற்றி பேசினார். துணை வேளாண் அலுவலர் குமாரிலட்சுமி வேளாண் சார்ந்த திட்டங்கள், மண் பரிசோதனையின் அவசியம்' குறித்து பேசினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி நன்றி கூறினார். உதவி மேலாளர்கள் லாவண்யா, யுவராஜ்குமரன் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை