மேலும் செய்திகள்
இடிந்து போன மக்கும், மக்காத குப்பைகள் பிளான்ட்
29-Dec-2024
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அய்யூர் ஊராட்சியில் குப்பையை எரிப்பதால் மரங்கள் பாதிப்படைகின்றன. இங்குள்ள மெயின் ரோட்டில் ஊராட்சி நிர்வாகம் நான்கு மாதமாக குப்பையை அதிக அளவில் கொட்டி தீவைத்து எரிக்கிறது. மேலும் பழுதடைந்த கழிப்பறை கட்டடங்கள் அருகே திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுவதால் சுகாதாரம் பாதிக்கிறது. குப்பை குவித்து எரிப்பதால் அருகே விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் பாதிக்கின்றன. ஊரில் துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் வசிக்க முடியவில்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர்.பாண்டுரங்கன் என்பவர் கூறுகையில், ''குப்பையை எரிப்பதால் வீட்டுக்குள் குடியிருக்க முடியவில்லை. வயலில் குப்பை கொட்டி எரித்ததால் தென்னை மரங்கள் பாதித்துள்ளன. ஊராட்சி நிர்வாகம், முதல்வர் பிரிவு வரை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
29-Dec-2024