உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் பதிலடி

மதுரை: ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆளுமை பற்றி அறிந்து தான் அவரை முதல்வர் வேட்பாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். நான்கரை ஆண்டு காலம் துணை முதல்வராக இருந்தபோது ஆளுமை பற்றி தெரியாதா'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார். மதுரையில் மேலும் அவர் கூறியதாவது: பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற்றுள்ளதால் அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பன்னீர்செல்வம் விமர்சனம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்கும் போது ஒரு நிமிடம் அவர் யோசித்து இருந்தால் அ.தி.மு.க.,வை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டார். கட்சிக்கு எவ்வளவு சோதனைகள், தடைகள், சத்திய சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பழனிசாமியை பார்த்து பன்னீர்செல்வம் விரக்தியில் பொறாமைப்படுகிறார். தடம் புரண்டு சென்ற அவரது கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அவரது கருத்துக்கள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவும் உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை