உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை

 யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கவலை

சோழவந்தான்: சோழவந்தான், விக்கிரமங்கலம் வட்டாரத்தில் யூரியா தட்டுப்பட்டால் சாகுபடி பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயிகள் கூறியதாவது: திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கல்புளிச்சான்பட்டி, கோவில்பட்டி, நரியம்பட்டி உட்பட விக்கிரமங்கலம் வட்டாரத்தில் பலநுாறு ஏக்கரில் முதல் போக சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. நடவுக்குப் பின் 15 முதல் 20 நாட்களுக்குள் யூரியா உரமிட வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாடு காரணமாக 20 நாட்களுக்கு மேலாகியும் உரமிட வழியில்லை. இங்குள்ள சொசைட்டியிலும் யூரியா இருப்பு இல்லை. அதிகாரிகளோ, 'இன்று அல்லது நாளை வந்துவிடும்' என போக்கு காட்டுகின்றனர். தனியார் உரக்கடைகளில் குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும்விற்கின்றனர். பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் நிலையும் உள்ளது. அதிக வி லைக்கு விவசாயிகள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கும் நிலை உருவாகும். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ