உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட்டில் வேலம்மாள் மாணவர்கள் சாதனை

உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட்டில் வேலம்மாள் மாணவர்கள் சாதனை

மதுரை: சென்னை வேலம்மாள் சர்வதேச பள்ளி மாணவர்கள், பனாமாவில் நடந்த உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட் போட்டியில் வென்று சாதனை படைத்தனர். மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், அக்.,19 முதல் 21 வரை உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் சென்னை பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் அவிவ், அஞ்சனா தேவி, பவித்ரா ஆகியோர், தங்கள் சிந்தனை திறன், தொழில்நுட்ப அறிவு, குழு பணி மூலம் மூன்றாம் இடம் வென்றனர். பள்ளிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !