மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / அக். 2
02-Oct-2025
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை(அக்.,29) மதுரை வருகிறார். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக இன்று(அக்.,28) காலை 9:40 மணிக்கு கோவை வருகிறார். காலை 11:00 மணிக்கு கொடீட்சியாவில் நடக்கும் மக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மதியம் 2:30 மணிக்கு கோவை டவுன் ஹால் மாநகராட்சி கட்டடத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். மதியம் 3:00 மணிக்கு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். மாலை 5:45 மணிக்கு திருப்பூர் செல்கிறார். நாளை காலை 11:30 மணிக்கு திருப்பூர் வேலாயுதசாமி கல்யாண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4:50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 5:50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அக்.,30 காலை 8:30 மணி முதல் 9:15 மணிக்குள் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். காலை 10:10 மணிக்கு மதுரையில் இருந்து டில்லி புறப்பட்டு செல்கிறார். முதல்வர் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு 7:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து திருநெல்வேலி செல்கிறார். துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு நாளை இரவு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அங்கு மரியாதை நிமித்தமாக துணை ஜனாதிபதியை சந்தித்து பேசுகிறார். அக்.,30 ல் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்கிறார்.
02-Oct-2025