உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுந்தரம் பூங்காவில் உருவாகிறது வாக்கிங், சைக்கிளிங் டிராக்

சுந்தரம் பூங்காவில் உருவாகிறது வாக்கிங், சைக்கிளிங் டிராக்

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய் சுந்தரம் பூங்கா வளாகத்தில் இலவச சைக்கிள்களுடன் கூடிய 'சைக்கிளிங் டிராக், வாக்கிங் டிராக்' அமைக்கப்படுகிறது.நீர்வளத்துறைக்கு சொந்தமான வண்டியூர் கண்மாய் 550 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாநகராட்சி சார்பில் கண்மாயை ஆழப்படுத்தி கரையோரம் உள்ள சுந்தரம் பூங்காவை ரூ.50 கோடியில் பொழுதுபோக்கு மையமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி கண்மாய் கரையை பலப்படுத்துதல், படகு சவாரி அமைத்தல், கண்மாயின் மேற்கு, வடக்கு கரையோரத்தில் சைக்கிள் பாதை, நடைப்பயிற்சி பாதை அமைத்தல், யோகா, தியான மையம், சிற்றுண்டி, நுாலகம், குழந்தைகள், முதியோர் விளையாட்டு கருவிகள் அமைத்தல், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பூங்கா, வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.சைக்கிள் ஓட்டுவோரை கவரும் வகையில் பூங்கா வளாகத்தில் 3 கி.மீ., நீளத்திற்கு 'சைக்கிளிங் டிராக்' அமைக்கப்படுகிறது. பூங்கா வாயிலில் உள்ள இம்மையத்தில் 20 சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். வாயிலில் இருந்து அண்ணாநகர் வழியாக ஒரு கி.மீ., நீளம், மாட்டுத்தாவணி வழியாக 2 கி.மீ., நீளத்தில் உள்ள இந்த 'டிராக்கில்' கண்மாயை ரசித்தவாறே சைக்கிளில் பயணிக்கலாம். வீட்டிலிருந்தே சைக்கிள் கொண்டு வருவோரும் இந்தப் பாதையை பயன்படுத்தலாம். 3 கி.மீ., நீளத்திற்கு நடைப்பயிற்சி செய்வோருக்கும் இந்தப் பாதை பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை