மேலும் செய்திகள்
அரசியல் கேள்விகள் கேட்காதீங்க... மதுரையில் வைகோ டென்ஷன்
20 minutes ago
ரயில் மோதியதில் கை துண்டான மாணவி பலி
1 hour(s) ago
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
1 hour(s) ago
மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வை விரைவில் எதிர்பார்க்கலாம் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மதுரையில் நேற்று இரவு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பின் அவர் கூறியதாவது: தற்போது பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. விரைவில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.,வாக மாறும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள் நல்ல முடிவு ஏற்படும். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது தொடர்பாக பா.ஜ., என்னை ஒருபோதும் அழைத்து அறிவுறுத்தியது இல்லை. ஒருமுறை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். அவரிடம் பேசியதை வெளியே சொல்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பா.ஜ., ஒரு முறை தான் அழைத்தது. இருமுறை நான் தான் சென்று சந்தித்தேன். விஜய்யுடன் கூட்டணி தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.
20 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago