என்னங்க ஒரே குழப்பமா இருக்கு... எதில் ஏறுவது எனத்தெரியாமல் பயணிகள்...
ஸ்டேஷனில் 7 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 7வது பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பெரும்பாலான ரயில் போக்குவரத்திற்கு முதல் 5 பிளாட்பாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் முதல் பிளாட்பாரத்தில் மட்டும் பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் வைக்கும் அறை, உண வகம், கழிப்பறை வசதிகள் உள்ளன. தீபாவளி முடிந்து பயணிகள் ஊர் திரும்பு வதால் பிளாட்பாரங்களில் அதிக கூட்டம் காணப் படுகிறது. இந்நிலையில், போதிய இடமின்றி ஒரே பிளாட்பாரத்தில் 2 ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. தினமும் காலை 6:50 மணிக்கு புறப்படும் மதுரை - ராமேஸ்வரம், காலை 7:05 மணிக்கு புறப்படும் மதுரை - கோவை ஆகிய ரயில்கள் சில மீட்டர் இடைவெளியில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அவசரகதியில் வரும் பயணிகள், தெளிவான அறிவிப்பின்மை, பிளாட்பாரங்களில் ரயில் விவரங்கள் குறித்து 'டிஸ்பிளே'க்கள் இல்லாததால், ராமேஸ் வரம் செல்வோர் கோவை ரயிலிலும், கோவை செல்வோர் ராமேஸ்வரம் ரயிலிலும் மாறி ஏறி விடுகின்றனர். பின்னர் கூடல்நகர், மதுரை கிழக்கு ஸ்டேஷன்களில் இறங்கி பஸ்களில் பயணிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இதேபோன்று தினமும் காலை 11:35 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வழியாக செல்லும் மதுரை - குருவாயூர், மதியம் 1:50 மணிக்கு புறப்படும் மதுரை - ராமேஸ்வரம் ஆகிய ரயில்களும் சில மீட்டர் இடைவெளியில் 3வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுகின்றன. தென்காசி, செங்கோட்டை செல்லும் பயணிகள் தவறுதலாக ராமேஸ்வரம் ரயிலில் அமர்ந்து கொள்வதால் குருவாயூர் ரயிலை தவற விடுகின்றனர். பயணிகள் கூறுகையில், ''தினமும் இரவு 11:20 மணிக்கு புறப்படும் மதுரை - புனலுார் ரயில், பகல் முழுதும் பிளாட் பாரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இடபற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய யார்டு வசதி, பிட் லைன்கள் அமைத்து அங்கு கொண்டு செல்ல வேண்டும். பிளாட்பாரங் களில் நிறுத்தப்படும் ரயில்கள் குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும்'' என்றனர்.