மேலும் செய்திகள்
ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி வெண்ணெயில் துர்நாற்றம்
05-Nov-2025 | 2
ஆர்ப்பாட்டம்..
05-Nov-2025
வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்
05-Nov-2025
அதலைக்காய் சீசன் துவக்கம்
05-Nov-2025
பொறியாளர்கள் ஆய்வு
05-Nov-2025
குறைதீர் முகாம்
05-Nov-2025
தமிழக மின்வாரியத்தில் தற்போதுள்ள மின்மீட்டர் பயன்பாட்டை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து ஸ்மார்ட் மீட்டரை கொண்டு வர உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கலுக்காக இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளனர்.மின்வாரியத்தில் ஏராளமான மின்இழப்புகள், திருட்டுகள், முறைகேடுகள் நடக்கின்றன. பல இணைப்புகளில் மீட்டர் அதிகம் ஓடுகிறது, குறைவாக ஓடுகிறது என்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் கோர்ட், வழக்கு என பிரச்னைகளும் நீள்கின்றன. ஸ்மார்ட் மீட்டர் மூலம் இவற்றை சரிசெய்ய முடியும்.தற்போது மேனுவலாக நடக்கும் கணக்கெடுப்புகளும் தேவையில்லை. ஸ்மார்ட் மீட்டரில் கணக்கெடுப்பும் துல்லியமாக இருக்கும். கட்டணம் செலுத்தாத பல நுாறு இணைப்புகளை ஒரே நேரத்தில் துண்டிக்கலாம், மீண்டும் இணைக்கலாம், வருங்காலங்களில் அலைபேசியுடன் இதனை இணைத்து பிரீபெய்டு, போஸ்ட் பெய்டு என கட்டணங்களையும் செலுத்த முடியும்.இதனால் காலம், நேரம் மிச்சமாவதோடு, பயன்பெறுவோருக்கும், மின்வாரியத்திற்கும் ஏராளமான பயன்கிடைக்கும். எனவே ஸ்மார்ட் மீட்டரை பயன்படுத்தும் வகையில் முன்னோட்டமாக சென்னை தி.நகரில் ஸ்மார்ட் மீட்டர் 1.40 லட்சம் இணைப்புகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அதன் செயல்பாடுகள் மின்வாரியத்திற்கு திருப்தியாக உள்ளன.இதனை பிற நகரங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்த உள்ளனர். இதற்காக மின்வாரிய பொறியாளர்களையும் தயார்படுத்தும் வகையில் பயிற்சி நடத்தி வருகிறது. நெய்வேலியில் உள்ள தேசிய மின்வாரிய பயிற்சி நிறுவனம் மூலம் மதுரையில் மாநிலம் முழுவதும் உள்ள பொறியாளர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி நடந்தது. அடுத்த கட்டமாக மின்வாரியத்தின் பிற அலுவலர்கள், ஊழியர்களுக்கும் நடத்தப்பட உள்ளது..ஸ்மார்ட் மீட்டரை மதுரையிலும் விரைவில் பொருத்த வேண்டும் என மின்நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஸ்மார்ட் மீட்டரால் ஏராளமான நன்மை உள்ளது. தற்போது சென்னையில் பொருத்தப்பட்டு அதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து வருகின்றனர். விரைவில் மதுரை உட்பட பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது'' என்றனர்.
05-Nov-2025 | 2
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025