உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் வேளாண் பல்கலை அமைய விடாமல் அரசை தடுப்பது யார்

மதுரையில் வேளாண் பல்கலை அமைய விடாமல் அரசை தடுப்பது யார்

மதுரை:மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்து நான்காண்டுகளாகியும் மெகா பட்ஜெட்டை காரணம் காட்டி பல்கலை அமைக்க விடாமல் கோவை வேளாண் பல்கலை, கல்லுாரி அதிகாரிகள் தமிழக அரசை தடுப்பதாக தென்மாவட்ட வேளாண், தோட்டக்கலை பேராசிரியர்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:தமிழகத்தைத் தவிர வேறு தென் மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வேளாண் பல்கலை, தோட்டக்கலை பல்கலைகள் உள்ளன. ஒரே இடத்தில் அதிகாரம் குவிய வேண்டும் என்பதற்காக கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பல்கலை வரக்கூடாது என்பதற்கு சில அதிகாரிகள் மறைமுகமாக செயல்படுகின்றனர். இதை வெளிப்படையாக சொல்லாமல் புதிதாக அமைப்பதற்கு ரூ.400 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவாகும் என்ற மெகா பட்ஜெட்டை காட்டி தமிழக அரசை மறைமுகமாக பயமுறுத்துகின்றனர்.

மெகா பட்ஜெட் தேவையா

பல்கலைகழகம் துவங்க வேண்டும் என்றால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்துதலில் தொடங்கி கட்டடங்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆடிட்டோரியம் கட்டுவதற்கு ரூ.500 கோடி வரை பட்ஜெட் தேவைப்படும். மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 354 ஏக்கர் நிலம் உள்ளது. ஏற்கனவே கூடுதலான கட்டடங்கள், வகுப்பறை, ஆடிட்டோரியம், ஆய்வகங்கள் நிறைந்துள்ளன. தனி அரசாணை வெளியிட்டு மதுரை வேளாண் கல்லுாரி என்பதற்கு பதிலாக மதுரை வேளாண் பல்கலை என்று பெயர் மாற்றம் செய்தால் போதும்.தென் மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள், மாநில அரசின் ஆராய்ச்சி நிலையங்கள், அரசு, தனியார் கல்லுாரிகளை பிரித்து அரசாணை வெளியிட்டு மதுரை வேளாண் பல்கலையின் கீழ் கொண்டு வரலாம். தமிழகத்தில் முதல் தோட்டக்கலை பல்கலை அமைக்க அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தோட்டக்கலை கல்லுாரியை தேர்வு செய்தார். ஆட்சி மாறிய பின் தி.மு.க., திட்டத்தை கிடப்பில் போட்டது. பெரிய குளம் ஆராய்ச்சி நிலையத்தில் பழப்பண்ணை தனியாகவும் 150 ஏக்கர் பரப்பளவில் கல்லுாரியும் உள்ளது. இதையும் தமிழகத்தின் முதல் தோட்டக்கலை பல்கலையாக மாற்றினால் மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலம் பல்வேறு சலுகைகளை பெறமுடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை