மனைவி மர்ம மரணம் கணவர் புகார்
பேரையூர்: எஸ்.தொட்டணம்பட்டி அழகுமலை மனைவி கீதா 29. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக மகள் அகிலாண்டேஸ்வரி யுடன் மஞ்சனூத்து கிராமத்திற்கு சென்றார். செப்.,5 இரவு அங்கிருந்து பஸ் ஏறி சின்னக் கட்டளை பெட்ரோல் பங்க் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். மகளை பெட்ரோல் பங்க் அருகே நிற்க வைத்துவிட்டு எதிர்புறம் டூவீலரில் வந்தவரிடம் கீதா பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டது. கீதா மயங்கி விழுந்தார். டூவீலரில் வந்தவர் தப்பி சென்று விட்டார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீதாவை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இறந்தார். மனைவி மரணத்தில் மர்மம் இருப்பதாக சேடபட்டி போலீசாரிடம் அழகுமலை புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.